1691கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல்
      கழல் மன்னர் பெரும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்
      வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும்
      தழல் முகந்து இள முலைமேல்
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை
      எனக்கு எனப் பெறலாமே             (4)