1693முரியும் வெண் திரை முது கயம் தீப்பட
      முழங்கு அழல் எரி அம்பின்
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்
      வந்திலன் என் செய்கேன்?
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன்
      இணை நெடுங் கண் துயிலா
கரிய நாழிகை ஊழியின் பெரியன
      கழியும் ஆறு அறியேனே             (6)