1695முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும்
      முனிவனும் முனிவு எய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய
      மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை
      அடங்க அம் சிறை கோலித்
தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர்
      கொடு வினை அறியேனே            (8)