1697தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன்
வண்டு ஆர் கூந்தல் மலர்-மங்கை வடிக் கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் கண்டுகொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே.             (1)