1699வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார்-கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்
வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட முனி-தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே             (3)