1701ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம்
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே            (5)