1702வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென் இலங்கை செந் தீ உண்ண சிவந்து ஒருநாள்
பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன்
கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே            (6)