1705குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய் திரி கால் சகடம் சினம் அழித்து
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே            (9)