1706கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ணபுரத்து எம் அடிகளை
திரு மா மகளால் அருள்மாரி செழுநீர் ஆலி வள நாடன்
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே             (10)