1727கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே (1)