1728தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின்
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
பெருமானை-அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே            (2)