1729விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உறப்
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?            (3)