173கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் ஓடிச்
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா
      தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா            (3)