1736செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர்-கோன்
கரு நீர் முகில் வண்ணன் கண்ணபுரத்தானை
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினே            (10)