1747வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய
      வாள் அரவின் அணை மேவி
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி
      சாம மா மேனி என் தலைவன்-
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம்
      அருங் கலை பயின்று எரி மூன்றும்
செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (1)