1748 | கவள மா கதத்த கரி உய்ய-பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள் நினைந்து துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட-சுடு படை துரந்தோன்- குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (2) |
|