1749வாதை வந்து அடர வானமும் நிலனும்
      மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி
      விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்-
      போது அலர் புன்னை மல்லிகை மௌவல்
      புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (3)