175சீர் ஒன்று தூதாய்த் திரியோதனன் பக்கல்
ஊர் ஒன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத்
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
      தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா             (5)