1750வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி
      வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றி ஆய் அன்று பார்-மகள் பயலை
      தீர்த்தவன் பஞ்சவர் பாகன்-
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து
      உயர் கொடி ஒளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (4)