1751 | மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய் மூவடி நீரொடும் கொண்டு பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்- அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து அலை புனல் இலைக் குடை நீழல் செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (5) |
|