1752 | மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிரக் குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம் தவிர்ந்தவன்-குலை மலி கதலிக் குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும் குளிர் தரு சூதம் மாதவியும் செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (6) |
|