1753வான் உளார்-அவரை வலிமையால் நலியும்
      மறி கடல் இலங்கையார்-கோனை
பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப்
      பரு முடி உதிர வில் வளைத்தோன்-
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட
      கண முகில் முரசம் நின்று அதிர
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (7)