1755பன்னிய பாரம் பார்-மகட்கு ஒழிய
      பாரத மா பெரும் போரில்
மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர்
      மைத்துனற்கு உய்த்த மா மாயன்-
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்
      சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (9)