1760வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்
      கையன ஆழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்
      நாகரிகர் பெரிதும் இளையர்
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்
      தேவர் இவரது உருவம் சொலலில்
அம் பவளத் திரளேயும் ஒப்பர்-
      அச்சோ ஒருவர் அழகியவா            (4)