1763 | பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்கொல்? யான் அறியேன் பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம் அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்- அச்சோ ஒருவர் அழகியவா (7) |
|