1764 | மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன் மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்- அச்சோ ஒருவர் அழகியவா (8) |
|