1770கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு-போய் அவன் மன்னும் ஊர்
பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே             (4)