1776இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணிமேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலிமாலைகள்
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது-பாடு இல் வைகுந்தமே (10)