1787தவள இளம் பிறை துள்ளும் முந்நீர்
      தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி
துவள என் நெஞ்சகம் சோர ஈரும்
      சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன்
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்
      என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மலர் நிற வண்ணர் மன்னு
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்             (1)