1789 | காலையும் மாலை ஒத்துண்டு கங்குல் நாழிகை ஊழியில் நீண்டு உலாவும் போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில் மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடாமுன் கோல மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (3) |
|