1790கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து
      கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள
      ஓர் இரவும் உறங்காதிருப்பேன்-
பெரு மணி வானவர் உச்சி வைத்த
      பேர் அருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவின்
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்             (4)