1791திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன்
      தீம் குழல் ஒசையும் தென்றலோடு
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற
      கோல இளம்பிறையோடு கூடி
      பண்டைய அல்ல இவை நமக்கு
      பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (5)