1793செங் கண் நெடிய கரிய மேனித்
      தேவர் ஒருவர் இங்கே புகுந்து என்
அங்கம் மெலிய வளை கழல
      ஆதுகொலோ? என்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு
      ஆடும்-அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின்
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (7)