1795 | சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்றுதாறும் போர்ப்பது ஓர் பொன்-படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை மூத்திடுகின்றன மற்று அவன்-தன் மொய் அகலம் அணையாது வாளா கூத்தன் இமையவர்-கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (9) |
|