1816மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள்-தம்மைச்
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன்
கறை உலாம் வேல்வல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார்
இறைவர் ஆய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே 10