1818 | இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள்-தம் கோயில்- விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறுந் தேன் வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (2) |
|