183மச்சொடு மாளிகை ஏறி
      மாதர்கள்தம் இடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்து
      காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்
      நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத்தோடு
      பாதிரிப் பூச் சூட்ட வாராய்             (3)