1837எங்கள் எம் இறை எம் பிரான்
      இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்-
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்-
பொங்கு தண் அருவி புதம் செய்ய
      பொன்களே சிதற இலங்கு ஒளி
செங்கமலம் மலரும்-திருக்கோட்டியூரானே             (1)