1838எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை
      இன் நகைத் துவர் வாய் நில-மகள்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்-
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை
      மாலையொடும் அணைந்த மாருதம்
தெய்வம் நாற வரும்-திருக்கோட்டியூரானே             (2)