1841வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன்
      விண்ணவர்-கோன் மதுமலர்த்
தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான்-
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி
      மாகம்மீது உயர்ந்து ஏறி வான் உயர்
திங்கள்-தான் அணவும்-திருக்கோட்டியூரானே             (5)