1843கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ-நிரைக்கு
      அழிவு என்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்-
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்
      மல்லிகை மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும்-திருக்கோட்டியூரானே             (7)