185புள்ளினை வாய் பிளந்திட்டாய்
      பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு
      காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க
      அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த
      செங்கழுநீர் சூட்ட வாராய்             (5)