1857 | இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர் பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்? குரக்கு-நாயகர்காள் இளங்கோவே கோல வல் வில் இராமபிரானே அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (1) |
|