186எருதுகளோடு பொருதி
      ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து
      கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து
      சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே
      புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்             (6)