1860எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன்
      தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே
நஞ்சு-தான் அரக்கர் குடிக்கு என்று
      நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்
      வேரி வார் பொழில் மா மயில் அன்ன
அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின்
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (4)