1863தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று
      தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு
      வாழகில்லா மதி இல் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை
      எங்களை ஒழியக் கொலையவனை
சூழுமா நினை மா மணி வண்ணா
      சொல்லினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (7)