1865 | புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின் சரங்களே கொடிது ஆய் அடுகின்ற சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம் இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன்-தன் சிறுவா குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (9) |
|