1866அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர
      அணி இலங்கை அழித்தவன்-தன்னை
பொங்கு மா வலவன் கலிகன்றி
      புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ் உலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்
      இம்மையே இடர் இல்லை இறந்தால்
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின்
      சாற்றினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (10)