1877சந்த மலர்க் குழல் தாழ தான் உகந்து ஓடி தனியே
வந்து என் முலைத்தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே            (1)