1878வங்க மறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட உன்னைக் கூவியும் காணாதிருந்தேன்
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே? (2)